Ilango Bharathy / 2023 மே 09 , மு.ப. 10:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
மருத்துவ கல்லூரிகளில் மாணவர்களை இணைப்பதற்கான நீட் பரீட்சை இந்தியா முழுவதும் நேற்றுமுன்தினம் நடைபெற்றது.
இப்பரீட்சையை எழுதுவதற்காக நாடு முழுவதும் 20 ,87 ,445 பேர் விண்ணப்பித்திருந்தனர். குறிப்பாக தமிழ்நாட்டை பொறுத்தவரையில் 1, 47 ,581 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
அதேசமயம் பரீட்சை மையத்தில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன. அதன்படி, மாணவ-மாணவிகள் தீவிர பரிசோதனைக்கு பிறகே பரீட்சை மையத்துக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், சென்னையில் பரீட்சை மையமொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது மாணவி ஒருவரின் உள்ளாடையை அதிகாரிகள் அகற்றுமாறு கூறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த மாணவியை சோதனையிட்டபோது அவர் அணிந்திருந்த ஆடையில் இருந்து ஒலி எழுந்துள்ளதாகவும், இதனையடுத்து மாணவியின் உள்ளாடையின் மீது சந்தேகம் எழுந்துததால் சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள் அவரை உள்ளாடையை அகற்றுமாறு வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து அந்த மாணவி உள்ளாடையை அகற்றிய பின்னரே பரீட்சை எழுத அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது குறித்த விசாரணைகள் இடம்பெற்றுவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago