2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

மாமியார் வீட்டுக்கு செல்ல அரச பேருந்தை கடத்தியவர்

Freelancer   / 2024 ஜூலை 28 , பி.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆந்திராவில் அரசு பேருந்து சாரதி ஒருவர் தனது மாமியார் வீட்டிற்கு செல்வதற்காக அரசு பேருந்தை கடத்தி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர பிரதேசத்தில் உள்ள வேங்கடாபுரம் கிராமத்தை சேர்ந்த அரச பேருந்து சாரதி துர்க்கையா. கடந்த சில நாட்களுக்கு முன்னர் இவரின் மனைவி, இவரிடம் சண்டை போட்டுக் கொண்டு தனது அம்மாவின் ஊரான நந்தியால் மாவட்டத்தில் உள்ள முச்சுமர்ரிக்கு சென்றுள்ளார்.

இதனால் மனதளவில் பாதிப்படைந்த துர்க்கையா தனது மாமியார் வீட்டுக்கு சென்று மனைவியை பார்க்க எண்ணியுள்ளார். ஆனால் அதற்கு கையில் பணம் இல்லாமல் இருந்துள்ள நிலையில், சமீபத்தில் ஆத்மகுரு பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு பேருந்து ஒன்றை எடுத்துக் கொண்டு முச்சுமர்ரிக்கு புறப்பட்டுள்ளார்.

பயணிகள் யாருமில்லாமல் தனியாக அரசு பேருந்து செல்வதை பார்த்த பொலிஸார் சந்தேகமடைந்து பேருந்தை வழிமறித்து விசாரித்ததில் துர்க்கையா பேருந்தை கடத்திக் கொண்டு வந்தது தெரிய வந்துள்ளது.

அதை தொடர்ந்து பேருந்தை பறிமுதல் செய்த பொலிஸார் துர்க்கையாவையும் பிடித்து வைத்துக் கொண்டு அவரது வீட்டாருக்கு தகவல் தெரிவித்தனர்.

பின்னர் அங்கு வந்த அவரின் உறவினர்கள், அவருக்கு மனநலம் சரியில்லை என்று சொன்னதையடுத்து அவர் மேல் வழக்கு பதியாமல் அவரை அனுப்பி வைத்துள்ளனர். மாமியார் வீட்டுக்கு செல்ல அரசு பேருந்தை திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.S

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .