A.K.M. Ramzy / 2021 ஜனவரி 03 , பி.ப. 03:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த தினத்தை முன்னிட்டு போடியில் ஞாயிற்றுக்கிழமை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட பல்வேறு அமைப்பினர் பேரணியாக சென்று சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டவர்களில் முக்கிய இடம் பெற்றவர் வீரபாண்டிய கட்டபொ ம்மன். தென் மாவட்டங்களில் மதுரையை அடுத்து தேனி மாவட்டம் போடியில்தான் கட்டபொம்மன் சிலை அமைந்துள்ளது. சுதந்திர போராட்டத்துக்கு வித்திட்டவராக கருதப்படும் வீரபாண்டிய கட்டபொம்மனின் 262ஆவது பிறந்த தினம் தேனி மாவட்டம் போடியில் கொண்டாடப்பட்டது.
அதிமுக சார்பில் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓபன்னீர்செல்வம் போடியில் உள்ள கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
கட்டபொம்மன் சிலைக்கு நாயுடு, நாயக்கர் அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
33 minute ago
4 hours ago
07 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
4 hours ago
07 Mar 2026