2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

மீண்டும் எம்.பி ஆனார் ராகுல் காந்தி

Freelancer   / 2023 ஓகஸ்ட் 07 , மு.ப. 11:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

மோடி இனப் பெயர் தொடர்பான அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் விதித்த 2 ஆண்டுகள் சிறை தண்டனையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில்  ராகுல் காந்தி மேல்முறையீடு செய்திருந்தார்.

 இம்மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய  உத்தரவிட்டது. இதையடுத்து தகுதி நீக்க உத்தரவை ரத்து செய்து ராகுல் காந்தியை மீண்டும் வயநாடு தொகுதி எம்.பி.யாக அறிவிக்கக்கோரி எதிர்க்கட்சிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில் ராகுல் காந்தியின் தகுதி நீக்க உத்தரவை மக்களவை செயலகம் திரும்ப பெற்றது. வயநாடு எம்.பியாக ராகுல் காந்தி தொடர்வார் என அறிவிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X