2025 செப்டெம்பர் 03, புதன்கிழமை

முதலமைச்சர்களை நீக்கும் சட்டமூலத்தை தாக்கல் செய்த அமித் ஷா

Shanmugan Murugavel   / 2025 ஓகஸ்ட் 20 , பி.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்தியாவின் பிரதமர், மாநில முதலமைச்சர்கள், அமைச்சர்கள் ஆகியோர் ஊழல் அல்லது கடுமையான குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி தொடர்ந்து 30 நாள்கள் தடுப்பில் வைக்கப்பட்டால், அவர்களை பதவியிலிருந்து நீக்குவதற்கான சட்டமூலத்தை அந்நாடின் உள்துறை அமைச்சர் அமித் ஷா அந்நாட்டுப் பாராளுமன்றத்தின் கீழவையில் இன்று தாக்கல் செய்தார்.

இச்சட்டமூலத்தின்படி ஒரு அமைச்சர் ஊழல் அல்லது கடுமையான குற்றச் செயல்களுக்காக கைது செய்ப்பட்டு 30 நாள்கள் தொடர்ந்து காவலில் வைக்கப்பட்டால், ஐந்து ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகளுக்கு சிறைத்தண்டனை விதிக்கக்கூடிய குற்றங்களில் அவர் ஈடுபட்டிருந்தால் 31ஆவது நாள் முதலமைச்சரின் பரிந்துரையின் பேரில் அவரை அமைச்சரவையிலிருந்து ஆளுநர் நீக்க வேண்டும். ஒருவேளை ஆளுநர் பரிந்துரை அளிக்கவில்லை என்றால், தானாகவே 31ஆம் நாளில் அவர் பதவியை இழப்பார்.

இதேபோல், ஒரு முதலமைச்சர்ர் தொடர்ந்து 30 நாள்களுக்கு தடுப்பில் இருந்தால், அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் பட்சத்தில் அதன் தண்டனைக் காலம் குறைந்தது 5 ஆண்டுகள் என இருந்தால் அவர் தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும். இல்லாவிட்டால், 31ஆவது நாளில் இருந்து அவர் முதலமைச்சர் பதவியை இழப்பார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .