2026 மார்ச் 08, ஞாயிற்றுக்கிழமை

மும்பையில் குளிரின் தாக்கம் அதிகரிப்பு

A.K.M. Ramzy   / 2020 டிசெம்பர் 23 , மு.ப. 08:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

மும்பை,

மும்பையில் டிசம்பர் மாத தொடக்கத்தில் இருந்து குறைந்த வெப்பநிலையே நிலவி வருகிறது. மேலும் அரபிக் கடலில் ஏற்பட்ட தாழ்வு நிலை காரணமாக ஒரு சில நாள்கள் லேசான மழையும் பெய்தது. இந்தநிலையில் நேற்று மும்பையில் வெப்பநிலை வழக்கத்தைவிட குறைந்தது. இதனால் குளிரின் தாக்கம் அதிகமாக இருந்தது.

குறிப்பாக அதிகாலை, இரவு நேரங்களில் குளிர் அதிகமாக இருந்தது. இதனால் இரவு வேலை செல்பவர்கள் அவதி அடைந்தனர்.

வீதியோரம் வசிக்கும் மக்கள் தீமூட்டி குளிர்காய்ந்து கொண்டனர். நேற்று மும்பை புறநகரில் 16 டிகிரி குறைந்தப்பட்ச வெப்பநிலை பதிவாகி இருந்தது. இதை வழக்கத்தைவிட 2 டிகிரி குறைவு ஆகும்.

இதேபோல, நகரில் 20 டிகிரி குறைந்தபட்ச வெப்பநிலை பதிவானது. மேலும் அடுத்த 2 நாள்களுக்கு மும்பையில் குளிரின் தாக்கம் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .