2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

முறையற்ற காதலுக்கு அந்தரங்க செயலி

Editorial   / 2023 ஜனவரி 29 , மு.ப. 10:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

"கள்ளக்காதல்" விவகாரம், உலகம் முழுவதும் பரவி உள்ளது. இது தொடர்பான வன்முறைகளும், குற்றங்களும், பெருகி வந்தபோதிலும், கள்ளக்காதலை தடுக்க முடிவதில்லை. இது தொடர்பாக ஒரு வித்தியாசமான செய்தி தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்ன அது? முறையற்ற காதல் அதாவது கள்ளக்காதலுக்காகவே ஒரு வெப்சைட் இருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம்.. அதன்பெயர் க்ளீடன்.

அந்தரங்க செயலி என்றும் சொல்லலாம். மனம்விட்டு பேச, குமுறலை கொட்ட, பிடித்த விஷயங்களை பகிர்ந்துகொள்வதற்காகவே, ஒரு ஆப் உருவாக்கப்பட்டுள்ளது.

தங்கள் வெப்சைட்டில் நாடிவரும் கள்ளக்காதல்கள் குறித்து இந்த க்ளீடன் இணையதளமானது புட்டு புட்டு வைத்துள்ளது. சமீப காலமாக மக்களிடம் டேட்டிங் ஆப் பயன்பாடு அதிகரித்து வருகிறது. அதாவது ஒரே மாதிரியான எண்ணங்கள், ஆசைகள் இருக்கும் நபர்கள் ஒன்றுசேர்ந்து இதுபோன்ற டேட்டிங் ஆப்பை உருவாக்குவார்கள்.

அந்தவகையில் ஏகப்பட்ட டேட் ஆப்கள் பெருகிவிட்டன. இதில் பல வகைகள் உண்டு.. கல்யாணமாகாத இளைஞர்களுக்கு ஒரு டேட்டிங் ஆப் என்றால், கல்யாணமான ஆண், பெண்ணுக்கும் டேட்டிங் ஆப் உண்டு. அப்படிப்பட்டதுதான், இந்த க்ளீடன் (Gleeden ) இந்தியா.

இது ஒரு பிரெஞ்சு டேட்டிங் ஆப் ஆகும். முழுவதும் 10 மில்லியன் அதாவது ஒரு கோடி யூசர்ஸ்களை இது கொண்டுள்ளது. இதில் ஒரு அதிர்ச்சி என்ன தெரியுமா? நம்ம இந்தியர்கள் மட்டும் 2 மில்லியன் பேர் இருக்கிறார்களாம். அதாவது, யூசர்ஸ் எண்ணிக்கையானது கடந்த செப்டம்பர் 2022 முதல் 11 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்ல, புதுசு புதுசாக இந்த க்ளீடனை நாடி செல்லும் யூசர்களின் அளவும் அதிகரித்து வருகிறதாம். கிட்டதட்ட 66 சதவீதம் பேர் நாட்டின் முன்னணி நகரங்களில் இருந்து வருபவர்கள்தானாம்.

அதாவது, 20 லட்சம் இந்தியர்களில் 66 சதவீதம் பேர் வளர்ந்த நகரங்களை சேர்ந்தவர்கள் ஆவர். 44% பேர் 2ம் கட்ட நகரங்களை சேர்ந்தவர்களாம். மேலும், இந்த ஆப்பில் பெரும்பாலான யூசர்கள் ஹைகிளாஸ், அதாவது, உயர்ந்த சமூக - பொருளாதார சூழலில் இருந்து வந்தவர்கள்தான் என்றும், க்ளீடன் தகவலை வெளியிட்டுள்ளது.

அப்படியானால், பெரும்பாலோனோர் மெத்த படித்தவர்களே. ஆண்களும், பெண்களும், டாக்டர்களும், என்ஜினியர்களும், பிசினஸ் செய்யக்கூடியவர்களும், என ஒவ்வொரு துறையிலும் மிளிர கூடியவர்கள்தான்.

இதுகுறித்து, அந்த நிறுவனத்தின் இந்தியாவின் மேனேஜர் சொல்லும்போது, இந்தியா ஒரு தார திருமண வழக்கத்தை கொண்டிருக்கும் நாடு. அதனால் கல்யாணத்துக்கு உறவுகளை இந்தியா விரும்புவதில்லை. ஆனால் எங்கள் ஆப் பயன்பாட்டாளர்கள் எண்ணிக்கையில் இந்தியர்கள்தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள். இதன் மூலம் இந்தியாவில் சமூக நிலைப்பாடு மாறிவருவதை தெரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், பெண்களுக்கு கூடுதல் பாதுகாப்பை இந்த தளம் ஏற்படுத்தி தருகிறது என்கிறார்.

அதேசமயம், இல்லத்தரசிகளும் இதில் இருக்கிறார்கள் என்பதுதான் ஆச்சரியமான விஷயம். கணவர் மீதான அதிருப்தி, மனம் விரும்பாத ஒரு வாழ்க்கை துணை போன்றவைகளால் பாதிக்கப்படுபவர்களும் இந்த ஆப்பில் இணைகிறார் என்கிறார். ஆக, உலக அளவில் 53 நாடுகள் இந்த க்ளீடன் ஆப்களில் இடம்பெற்றுள்ள நிலையில், 10வது இடத்தில் இந்தியா உள்ளது என்பதும், அதுவும் 20 சதவீதம் இந்தியர்கள் இந்த கிளீடனை பயன்படுத்துகிறார்கள் என்பதும்தான் ஆச்சரியமூட்டும் விஷயமே.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .