Shanmugan Murugavel / 2025 ஓகஸ்ட் 12 , பி.ப. 11:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தின் ஆக்ரா அருகிலுள்ள பதேபூர் நகரின் அபுநகரில் ரெடியா எனும் பகுதி உள்ளது. இங்கு மிகவும் பழமையான முஸ்லிம்களின் தர்கா உள்ளது. முகலாயர் ஆட்சிக்கால இந்த கட்டிடத்தின் உள்ளே நவாப் அப்துஸ் சமது என்பவரின் புனித சமாதி உள்ளது. இங்கு வெள்ளிக்கிழமை தோறும் முஸ்லிம்கள் வந்து வணங்கிச் செல்வது வழக்கம். இந்த இடம் உத்தரப் பிரதேச அரசின் நிலப் பதிவுகளில் கஸ்ரா எண் 753-ன் கீழ் மக்பரா மங்கி (தேசிய சொத்து) என்று அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்ட கல்லறையாக உள்ளது.
இந்நிலையில் பாரதிய ஜனதாக் கட்சி, பஜ்ரங் தளம் உள்ளிட்ட இந்துத்துவா அமைப்பினர், ‘‘இந்த தர்கா, ஒரு சிவன் கோயிலை இடித்துவிட்டு கட்டப்பட்டுள்ளது. எனவே இந்த இடம் இந்துக்களுக்கு சொந்தமானது. இதனுள் இருக்கும் கட்டமைப்புக்குள் தாமரை மலர் மற்றும் திரிசூலம் இருப்பதே கோயிலுக்கான ஆதாரங்கள்’’ என்று சர்ச்சையை கிளப்பினர். மேலும் இந்துத்துவா அமைப்புகளின் திரளான தொண்டர்கள் பாதுகாப்புக்கு இருந்த பொலிஸாரை மீறி தர்காவில் புகுந்து திங்கட்கிழமை (11) சேதப்படுத்தினர். இதையடுத்து பொலிஸார் அனைவரையும் அங்கிருந்து விரட்டி அமைதியை ஏற்படுத்தினர்.
8 hours ago
04 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
04 Nov 2025