2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

மூடநம்பிக்கையால் மற்றொரு சிசு மரணம்

Freelancer   / 2023 ஜூலை 27 , பி.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் மல்லேனஹள்ளி அருகே கொல்லரகட்டி கிராமத்தை சேர்ந்த  தம்பதிக்கு கடந்த மாதம் 22-ந் திகதி துமகூரு வைத்தியசாலையில் இரட்டை குழந்தைகள் பிறந்தன. குறைமாதத்தில் இந்த குழந்தைகள் பிறந்திருந்தன. இதனால் இரு குழந்தைகளுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதில் ஒரு குழந்தை  உயிரிழந்தது. மற்றொரு குழந்தையின் உடல் நிலையும் மோசமாக இருந்தது. இதையடுத்து அந்த குழந்தை தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டது. குழந்தைக்கு உடல்நலம் தேறியது.

இதையடுத்து கடந்த 10-ந் திகதி தாயும், குழந்தையும் வைத்தியசாலையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். ஆனால் அந்த கிராமமக்கள் ஒரு மூடநம்பிக்கையை கடைப்பிடித்து வருகிறார்கள். அதாவது எந்த பெண்ணும் குழந்தை பெற்றால் அவர்களை உடனடியாக ஊருக்குள் அனுமதிப்பதில்லை. தாயும், சேயையும் ஊருக்கு வெளியே ஒரு மாதம் குடிசையில் தங்க வைப்பதை வழக்கமாக வைத்திருந்தனர்.
 
இதையடுத்து கிராமத்தின் வெளிப்பகுதியில் குடிசை அமைத்து தாய் மற்றும் குழந்தை தங்க வைக்கப்பட்டனர். கடந்த ஒரு வாரமாக கிராமத்தில் கனமழை பெய்து வந்தது. இதனால் குளிர்ச்சியான சூழல் நிலவியது.  குழந்தையின் உடல்நிலை மோசமானது. இதையடுத்து அந்த குழந்தையை அருகில் உள்ள  வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். எனினும் அந்த குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X