Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 ஜூன் 06 , பி.ப. 10:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருநெல்வேலி மாவட்டம் பணகுடியில் காரில் விளையாடிக் கொண்டிருந்த போது, கதவு மூடிக் கொண்டதால் 2 சிறுவர்கள் பலியாயினர்.
பணகுடி அருகேயுள்ள லெப்பைக்குடியிருப்பைச் சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி அருணா. இவர்களுக்கு நித்திஷ் (வயது 7), நிதிஷா (வயது 5) என்ற இரு குழந்தைகள் உள்ளனர்.
இந்த இரு குழந்தைகளும் அயல்வீட்டைச் சேர்ந்த குழந்தையான கபிசந்த் (வயது 4) ஆகிய மூவரும் சனிக்கிழமை (04) மதிய நேரம் 02.00 மணியளவில், வீட்டுக்கருகில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த நாகராஜின் அண்ணின் (பெரியப்பா) காரைத் திறந்து உள்ளே விளையாடிக் கொண்டிருந்தனர்.
காரினுள்ளே விளையாடிய அந்தக் குழந்தைகள் வெளியேற நினைத்து, கதவைத் திறக்க குழந்தைகளுக்குத் தெரியவில்லை. காற்றுப் புகாத காருக்குள் மூச்சுத்திணறிய மூன்று குழந்தைகளும் காரிலேயே மயங்கிச் சரிந்திருக்கின்றனர்.
இந்தச் சூழலில் வெகுநேரமாகியும் விளையாடச் சென்ற குழந்தைகள் வீடு திரும்பாததால், அவர்களின் பெற்றோர், உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் குழந்தைகள் கிடைக்காமல் போகவே, தற்செயலாக அந்தப்பக்கம் நின்றிருந்த காரைப் பார்த்தவர்கள் அதனுள் மூன்று குழந்தைகளும் மயங்கிக் கிடந்தது கண்டு பதறியவர்கள், மூவரையும் உடனடியாக மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அங்கு குழந்தைகளைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், மூன்று குழந்தைகளும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்திருக்கிறார்கள்.
30 minute ago
1 hours ago
1 hours ago
29 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
1 hours ago
1 hours ago
29 Jul 2025