2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

மெரினாவில் கல்லீரல்

Ilango Bharathy   / 2023 ஏப்ரல் 19 , பி.ப. 03:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலக கல்லீரல் தினத்தை முன்னிட்டு சென்னை, மெரினா கடற்கரையில் கல்லீரல் வடிவ மணல் சிற்பத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்றைய தினம் (19)  திறந்து வைத்தார்.

பொதுமக்களிடம் கல்லீரல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், அப்போலோ வைத்தியசாலை சார்பில் குறித்த கல்லீரல் வடிவ மணல் சிற்பம் உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் இந்த சிற்பத்தை உருவாக்கியுள்ளார்.சுமார் 80 தொன்  மணலைக்  கொண்டு இச்சிற்பம் உருவாக்கப்பட்டுள்ளது.

 இந்நிலையில் இம்மணல் சிற்பத்தை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்றைய தினம் திறந்து வைத்தார்.

இதைத் தொடர்ந்து, 'ஆரோக்கியமான கல்லீரல், ஆரோக்கியமாக வாழுங்கள்' என்னும் புத்தகத்தினையும் அவர் வெளியிட்டுவைத்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .