2026 மார்ச் 05, வியாழக்கிழமை

மோடியை சந்தித்தார் நேபாள பிரதமர்

Freelancer   / 2022 ஏப்ரல் 02 , பி.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

3 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா வந்துள்ள நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தேபா, பிரதமர் நரேந்திர மோடி ஐதராபாத் இல்லத்தில் இன்று காலை சந்தித்தார்.

அப்போது இரு தரப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், இரு தலைவர்கள் முன்னிலையில் பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

அப்போது, இந்தியா உதவியுடன் அமைக்கப்பட்ட பீஹாரின் ஜெயநகர் முதல் நேபாளத்தின் குர்தா வரையிலான ரயில் திட்டம், மின்சார திட்டத்தை இரு தலைவர்களும் ஆரம்பித்து வைத்துடன், நேபாளத்தில் ரூபே கார்டும் அறிமுகப்படுத்தப்பட்டது.

பின்னர் நேபாள பிரதமர் கூறுகையில், “பிரதமர் மோடியின் தொலைநோக்கு தலைமையின் கீழ் இந்தியாவின் வளர்ச்சியை நான் பாராட்டுகிறேன். கோவிட்டிற்கு எதிரான போராட்டத்தை இந்தியா கையாண்ட விதத்தை நாங்கள் பார்த்திருக்கிறோம். 

வைரஸை எதிர்த்து போராட மருந்து, மருத்துவ உபகரணங்கள் ஆகியவற்றை இந்தியாவிடம் இருந்து தான் முதலில் பெற்றோம். இந்தியா நேபாளம் உறவுகள் தொடர்பாக நட்பு ரீதியில் ஆரோக்கியமான ஆலோசனை நடத்தினோம்“ என்றார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .