2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

’மோடி பதவி விலகியிருக்க வேண்டும்’

A.K.M. Ramzy   / 2021 ஜூலை 08 , பி.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

விழுப்புரம்

மத்திய சுகாதாரத் துறை அமைச்சரை நீக்கியத்துக்குப் பதில், பிரதமர் மோடி பதவி விலகி இருக்கவேண்டுமென்று காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி கருத்து தெரிவித்துள்ளார்.

பெற்றோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து இன்று விழுப்புரம் மத்திய மாவட்ட காங்கிரஸ் சார்பில் விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்டத் தலைவர் சீனிவாச குமார் தலைமையில் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநிலப் பொதுச் செயலாளர் சிரஞ்சீவி, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கே.எஸ்.அழகிரி பேசும்போது, 'காங்கிரஸ் ஆட்சியில் 108 டொலருக்குக் கச்சா எண்ணெய் விற்றபோது, ரூ.70க்கு பெற்றோல் விற்பனை செய்யப்பட்டது. தற்போது கச்சா எண்ணெய் 50 டொலருக்கும் குறைவாக விற்கப்படுகிறது. ஆனால் பெற்றோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்ந்துகொண்டே செல்கிறது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இதன் விலை குறையுமென' அழகிரி தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X