2026 மார்ச் 08, ஞாயிற்றுக்கிழமை

’யாருக்கு பயப்படுகிறது அரசு’

A.K.M. Ramzy   / 2021 ஜனவரி 27 , பி.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

  சென்னை :

'இந்த அரசு யாருக்குப் பயப்படுகிறது' என, மக்கள் நீதி மையம் தலைவர் கமல் கேள்வி எழுப்பியுள்ளார்.

அறுவை சிகிச்சைக்கு பின், ஓய்விலுள்ள கமலின் டுவிட்டரில்  சில கேள்விகள் பதிவிலுள்ளன.அதில்,

கிராம சபைக் கூட்டங்கள் நடத்தக்கூடாது என, தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு, 'கொவிட்'டை காரணம் காட்டியுள்ளனர். குடியரசு நாள் கொண்டாடலாம்; ஜெயலலிதா விழா நடத்தலாம்; கிராம சபை மட்டும் கூடாதா? உண்மையில், இந்த அரசு யாருக்கு பயப்படுகிறது?

நாட்டு வளர்ச்சியில் மக்களின் பங்கு, தேர்தல் வந்தால் ஓட்டு போடுவதோடு சுருங்கி விட்டது. தங்களுக்கு வேண்டியதை பெறவும், வேண்டாததை தவிர்க்கவும், மக்களுக்கு இருக்கும் உரிமையை செயல்படுத்தும் பாதையில் நகர்வோம்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .