2026 மார்ச் 08, ஞாயிற்றுக்கிழமை

ரஜினியின் முடிவை விமர்சிப்பது முறையல்ல

A.K.M. Ramzy   / 2020 டிசெம்பர் 31 , பி.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவகங்கை

சிவகங்கையில் திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் ஆலோசனைக் கூட்டம் பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் நடந்தது. எம்பிக்கள் திருச்சி சிவா, டி.கே.எஸ். இளங்கோவன், மாவட்டச் செயலாளர் கே.ஆர். பெரியகருப்பன் எம்எல்ஏ, முன்னாள் அமைச்சர் தென்னவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினரிடம் வர்த்தகர்கள், ஆசிரியர்கள்,பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

கூட்டத்துக்குப் பின்னர் டி.ஆர்.பாலு செய்தியாளர்களிடம் கூறிய தாவது: மு.க.ஸ்டாலினுக்கும், எங்களுக்கும் ரஜினி நெருங்கிய நண்பர்.

ரஜினிகாந்த் அரசியலில் இருந்து விலகுவதை விமர்சனம் செய்வது முறையல்ல. ரஜினிக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது என்பது அனைவரும் அறிந்த உண்மை. வாரிசு அரசியல் என்று முதல்வர் சொல்வது, துணை முதல்வர் மகன் ரவீந்திரநாத்தை குறிப்பிட்டுச் சொல்லி இருக்கலாம், என்று கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .