2026 மார்ச் 08, ஞாயிற்றுக்கிழமை

’ரஜினி வீட்டு சிறையிலுள்ளாரா என்பது தெரியாது’

A.K.M. Ramzy   / 2021 ஜனவரி 14 , பி.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

கோவை:

நடிகர் ரஜினிகாந்த் வீட்டுசிறையில் வைக்கப்பட்டு உள்ளாரா என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனிடம் நிருபர்கள்  கேட்டகேள்விக்குத் 'தெரியாது' எனப் பதிலளித்தார்.

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், 5ஆம் கட்ட பிரசாரமாக கோவைக்குச் சென்றுள்ளார். கோவை தனியார் ஹோட்ட லில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

 கேள்வி: மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு சட்டமன்ற தேர்தலில் ஒரு எம்.எல்.ஏ. கூட கிடைக்காது என்று அமைச்சர் கருப்பண்ணன் கூறியுள்ளாரே?

பதில்: அது அவரது பிரார்த்தனையாக இருக்கலாம். ஆனால், எங்கள் பயணத்தில் கிடைக்கும் செய்தி வேறாக இருக்கிறது. நான் என்வாழ் நாளில் நட்சத்திர அந்தஸ்தை அனுபவித்தவன் என்ற முறையில் சொல்கிறேன். இத்தகைய எழுச்சியை, கூட்டங்களை நான் பார்த்தது இல்லை.

கேள்வி: சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவீர்களா?

பதில்: நிச்சயமாக போட்டியிடுவேன். மேலும் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடுவதாக தகவல் உள்ளதே என்று கேட்கிறீர்கள். அது தகவல்தான், நான் சொல்லவில்லை.

கேள்வி: சாதி அடிப்படையில் வேட்பாளர்களை நிறுத்துவீர்களா?

பதில்: நாங்கள் முன்னிறுத்த போவது சாதியை அல்ல சாதனையைதான், தேவைப்பட்டால் பொதுதொகுதியில் கூட தாழ்த்தப்பட்ட வேட்பாளர்களை நிறுத்துவோம்.

கேள்வி: முழுநேர அரசியலில் ஈடுபடுவீர்களா?

பதில்: அரசியல் என்பது தியாகமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அதை ஒரு வேலையாக எடுத்து கொண்டும் செய்யலாம்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .