Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Freelancer / 2025 ஏப்ரல் 10 , மு.ப. 09:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
அயோத்தி இராமர் கோயிலில், மே 23இல் ராம் தர்பார் திறக்கப்படுகிறது.
இதனை ஜூன் 6 முதல் பொதுமக்கள் தரிசிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஸ்ரீராமஜென்மபூமி அறக்கட்டளையின் தலைவர் நிருபேந்தர் மிஸ்ரா கூறும்போது, "இந்த மாத இறுதியில் ராம் தர்பாரில் ஸ்ரீராமர், சீதா, பரதன், லஷ்மணன், அனுமன் ஆகியோரின் சிலைகள் அமைக்கப்படுகின்றன.
“இவை உள்பட கோயிலின் அனைத்து சிலைகளும் ராஜஸ்தானின் மக்ரானா சலவை கற்களால் ஜெய்ப்பூரில் செய்யப்பட்டு இம்மாத கடைசியில் வந்துசேர உள்ளன. ஆனால், பாலராமர் சிலைக்கான விழா போன்று எதுவும் ராம் தர்பாருக்கு நடத்தப்போவதில்லை” என்றார்.
இத்துடன் கோயில் கட்டுமானப் பணி முடிக்கப்பட்டு, இறுதியில் வளாக சுற்றுச்சுவர் எழுப்பப்பட உள்ளது. இராமர் கோயில் வளாகத்தில் சூர்யதேவ், பாக்வதி, அன்னபூர்ணா, சிவன், விநாயகர், அனுமன் ஆகிய கடவுள்களுக்கும் கோயில்கள் அமைகின்றன.
மேலும் சப்தரிஷிகளான வால்மீகி, வசிஷ்டர், விஸ்வாமித்ரர், அகஸ்திய முனி, சிஷாத்ராஜ், சபரி, அகல்யா ஆகியோருக்கும் ஏழு கோயில்கள் இடம் பெறுகின்றன. இவை அனைத்தும் ஜுன் 6இல் பொதுமக்கள் தரிசனத்திற்கு திறக்கப்படவுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
45 minute ago
2 hours ago