2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

ரிமோட்டால் விபரீதம்; மகளுக்காக உயிரை விட்ட தந்தை

Ilango Bharathy   / 2023 மே 25 , மு.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மகளைக் காப்பாற்றுவதற்காகத் தந்தையொருவர் உயிரிழந்த சம்பவம் சேலத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 பைத்தூரைச் சேர்ந்த கணேசன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவ தினத்தன்று அவரது மகளுக்கும்  மகனுக்கும் இடையே   தொலைக்காட்சி பார்ப்பதில் தகராறு எழுந்ததாகவும், இதனால் ஆத்திரமடைந்த கணேசன் இருவரையும் திட்டி விட்டு கோபத்தில் தொலைக்காட்சி ரிமோட்டை உடைத்ததாகக்  கூறப்படுகிறது.

இதனால் மனம் உடைந்த மகள் வீட்டில் இருந்த கிணற்றில் குதித்துள்ளார். இதனையடுத்து மகளைக் காப்பாற்ற கணேசனும் கிணற்றில் குதிக்கவே அருகில் இருந்தவர்கள் இருவரையும் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் இருவரையும் சடலமாக மீட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X