2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

லஞ்சப் பணத்தை விழுங்கிய அதிகாரி

Freelancer   / 2023 ஜூலை 27 , பி.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய பிரதேசத்தின் கத்னி பகுதியில் வருவாய்த்துறை ஊழியராக பணியாற்றி வருபவர் கஜேந்திர சிங். ஒரு தனியார் நிறுவனத்திடம் லஞ்சப் பணத்தை வாங்கிய போது, லோக் ஆயுக்தா காவலர்கள் அவரை கையும் களவுமாக பிடித்தனர். ஆனால், அவர்களிடம் சிக்காமல் தப்பிக்க ரூ.5000 லஞ்சப் பணத்தை வாயில் போட்டு மென்று விட்டார் கஜேந்திர சிங்.

வாயில் இருக்கும் ரூபாய் நோட்டுகளை வெளியே எடுப்பதற்காக கஜேந்திர சிங்கை அழைத்துக்கொண்டு லோக் ஆயுக்தா காவல்துறையினர்  மருத்துவமனைக்கு விரைந்தனர்.

 கஜேந்திர சிங்கின் இந்த செயலால் அங்கிருந்த மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர், மேலும் கடும் முயற்சிக்கு பிறகு அவரது தொண்டைக்குழியில் அடைத்திருந்த ரூ.5000 நோட்டுக்களை வெளியில் எடுத்தனர். இதனை தொடர்ந்து, அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்ததை அடுத்து, கஜேந்திர சிங்கை லோக் ஆயுக்தா காவலர்கள் கைது செய்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X