Editorial / 2021 மார்ச் 22 , மு.ப. 10:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
பூந்தமல்லியை சேர்ந்த பெற்றோர், தங்களது 15 வயது மகளை காணவில்லை என பூந்தமல்லி பொலிஸில் சில நாட்களுக்கு முன் புகார் அளித்திருந்தனர். இதுகுறித்து பொலிஸார் விசாரித்து வந்தனர்.
இந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன் அந்த சிறுமி வீட்டிற்கு திரும்பி வந்தாள்.
அவளிடம் விசாரித்தபோது, கார்த்தி என்பவன் தன்னை காதலித்து வந்தான். அவன் என்னை சென்னையில் உள்ள ஒரு விடுதிக்கு அழைத்து சென்று, ஒரு அறையில் தங்கவைத்து பாலியல் பலாத்காரம் செய்தான் எனத் தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர், அவனது நண்பர்கள் 2 பேரை வரவழைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தான். அவர்களிடம் இருந்து தப்பி வந்தேன், என கூறினாள்.
அதிர்ச்சியடைந்த பெற்றோர், இதுபற்றி பொலிஸூக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் இந்த வழக்கு பூந்தமல்லி அனைத்து மகளிர் பொலிஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டது.
இன்ஸ்பெக்டர் ஜோதிலட்சுமி விசாரணையில், குன்றத்தூர் அடுத்த சிக்கராயபுரத்தை சேர்ந்த காதலன் கார்த்தி (23), அவனது நண்பர்கள் பூந்தமல்லியை சேர்ந்த மணி (26), செல்வராஜ் (23), ஆகிய 3 பேர், சிறுமியை பலாத்காரம் செய்தது தெரிந்தது.
அவர்களை போக்சோ சட்டத்தில் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago