Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2024 ஓகஸ்ட் 01 , மு.ப. 11:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
கோவை மாநகராட்சியில் உள்ள பாடசாலை ஒன்றில், பிளஸ் 1 படிக்கும் மூன்று மாணவர்கள் குளிர்பானத்தில் மதுபானம் கலந்து அருந்திய அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. இது, ஆசிரியர்கள் நடத்திய விசாரணையில் உறுதி செய்யப்பட்டதும், மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோருக்கு 'கவுன்சிலிங்' வழங்கப்பட்டது.
தமிழகத்தில் பாடசாலைகள் மற்றும் வழிபாட்டு தலங்கள் அருகாமையில் மதுக்கடைகள், மதுக்கூடங்கள் நடத்தக் கூடாது என்கிற அரசின் உத்தரவு அமலில் இருக்கிறது. ஆனால், அதை மீறி, பல மதுக்கடைகள் மற்றும் மதுக்கூடங்கள் நடத்தப்பட்டுக்கொண்டு தான் இருக்கின்றன.
அதேநேரம், பாடசாலை சீருடையில் வருவோருக்கு மதுபானங்கள் வழங்கக் கூடாதென மதுக்கடை ஊழியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பினும், மாணவர்களுக்கு மதுபானம் வாங்கிக் கொடுப்பதற்காக, ஒரு கும்பல் செயல்படுகிறது.
இந்நிலையில் சமீபத்தில், கோவை மாநகராட்சி பாடசாலை ஒன்றில், பிளஸ் 1 படிக்கும் மூன்று மாணவர்கள் சேர்ந்து, உடற்கல்வி வகுப்பு நேரத்தில், வகுப்பறையில் அமர்ந்து, குளிர்பானத்துடன் மதுபானம் கலந்து அருந்தியது தெரியவந்தது.
சம்பந்தப்பட்ட பாடசாலையில், மதுபானம் அருந்திய மூன்று மாணவர்களில் ஒருவர், தனது தந்தை வைத்திருந்த பணத்தில் ரூ.4,000 எடுத்து, நண்பர்களுடன் சேர்ந்து பிரியாணி சாப்பிட்டதாகவும், நண்பர்கள் மதுபானம் அருந்தியதாகவும் தெரிவித்திருக்கிறார்.
இத்தகவலை, ஆசிரியையிடம் மாணவனின் தந்தை கூறியிருக்கிறார். மாணவர்களிடம் நடத்திய விசாரணையில், வெளிநபர்கள் மூலமாக மதுபானம் பெற்றதாகவும், குளிர்பானத்தில் கலந்து, உடற்கல்வி வகுப்பு நேரத்தில் அருந்தியதாகவும் தெரிவித்திருக்கின்றனர்.
இந்நிலையில், மாணவர்களின் பெற்றோரை வரவழைத்து, அவர்களது முன்னிலையில் மாணவர்களுக்கு 'கவுன்சிலிங்' வழங்கப்பட்டது.S
2 hours ago
5 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
7 hours ago
7 hours ago