Ilango Bharathy / 2022 மார்ச் 31 , மு.ப. 07:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டத்தைச் சேர்ந்தவர் சங்கரண்ணா என்ற விவசாயி. 45 வயதாக இவர் கடந்த 2021 ஆண்டு ஒக்டோபர் மாதம் கணவரால் கைவிடப்பட்ட மேகனா என்ற 25 வயதான யுவதியைக் திருமணம் செய்து கொண்டார்.
சங்கரண்ணா வயதான தோற்றம் உடையவராக இருந்ததால் 60 வயது முதியவர், 25 வயது இளம்பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியானதோடு அவர்களது
திருமணப் புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகின.இந்நிலையில் திருமணம் நடைபெற்று 6 மாதங்களே ஆன நிலையில் சங்கரண்ணா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து பொலிஸார் நடத்திய விசாரணையில் ” மேகனா தற்போது 4 மாத கர்ப்பமாக இருப்பதாகவும், கடந்த சில தினங்களாக மேகனாவுக்கும், சங்கரண்ணாவின் தாய்க்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்து உள்ளதாகவும், இதனால் மேகனா, சங்கரண்ணாவிடம் பெங்களூருவுக்குச் சென்று தனிக்குடித்தனம் நடத்தலாம் என்று கூறி வந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் அதற்கு சங்கரண்ணா மறுப்புத் தெரிவிக்கவே இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் மன உளைச்சலுக்கு உள்ளான சங்கரண்ணா கடந்த 28 ஆம் திகதி இரவு வீட்டில் இருந்து வெளியேறி அப்பகுதியொன்றில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சங்கரண்ணா சாவுக்கு மேகனா தான் காரணம் என்றும், சங்கரண்ணாவை மேகனா தற்கொலைக்கு தூண்டியதாகவும் பொலிஸ் நிலையத்தில் சங்கரண்ணாவின் தாய் புகார் அளித்து உள்ளார்.
அப் புகாரின் அடிப்படையில் பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவமானது அப்பகுதில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago