2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

வயநாடு அருகே நிலத்தின் அடியில் சத்தம்

Freelancer   / 2024 ஒக்டோபர் 31 , மு.ப. 09:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

வயநாடு அருகே நிலத்தின் அடியில் பலமுறை சத்தம் ஏற்பட்ட வண்ணம் இருப்பதாகவும், இதனால் அப்பகுதி பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர் எனவும் தெரியவந்துள்ளது.

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் மேப்பாடி அருகே முண்டக்கை, சூரல்மலை பகுதிகளில் கடந்த ஜூலை மாதம் ஏற்பட்ட நிலச்சரிவு ஏற்பட்டது.

இதில், 400க்கும் மேற்பட்டோர் பலியாகினர். 

இந்த நிலையில், நீலகிரி மாவட்டம் கூடலூர்-கேரள எல்லையில் உள்ள மலப்புரம் மாவட்டம் போத்துகல், ஆனக்கல் பகுதியில், செவ்வாய்க்கிழமை (29) இரவு, நிலத்தின் அடியில் பலமுறை சத்தம் கேட்டதாக, அப்பகுதி மக்கள் கேரள வருவாய்த்துறை, பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X