2025 மே 07, புதன்கிழமை

வழிவிடாததால் தாயை தாக்கிய தம்பதி கைது

Freelancer   / 2024 ஜூலை 21 , பி.ப. 12:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹாராஷ்டிராவில் சாலையில், தனது காருக்கு வழி விடாததற்காக பைக்கில் குழந்தைகளுடன் சென்ற பெண்ணை கொடூரமாக தாக்கிய முதியவரை பொலிஸார் கைது செய்தனர்.

மஹாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள பாஷன் -பனீர் சாலையில் ஜெர்லின் டி சில்வா என்ற பெண், குழந்தைகளுடன் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அந்த வழியில், ஸ்வப்னில் கேக்ரே என்பவர், மனைவியுடன் காரில் வந்து கொண்டிருந்தார்.

இந்நிலையில், காருக்கு வழிவிடுவதற்காக ஜெர்லின் இடதுபுறம் சென்றுள்ளார். ஆனால், அவரை முந்தி சென்ற ஸ்வப்னில் கேக்ரே, பைக் குறுக்கே காரை நிறுத்தியுள்ளார்.

வெளியே வந்த அவர், காருக்கு வழி விடாதது ஏன் என கேட்டு ஜெர்லின் முடியை பிடித்து இழுத்ததுடன் முகத்தில் பல முறை குத்தியுள்ளார். அதில், அவரது மூக்கு உடைந்து இரத்தம் ஒழுகியது. இதனை பார்த்த குழந்தைகள் அச்சமடைந்துள்ளனர்.

இந்நிலையில், தனக்கு ஏற்பட்ட துயரத்தை ஜெர்லின் டி சில்வா சமூக வலைதளத்தில் வெளியிட்டதுடன் பொலிஸிலும் புகார் செய்தார். இதனையடுத்து ஸ்வப்னில் கேக்ரேவையும், அவரது மனைவியையும் பொலிஸார் கைது செய்தனர்.

கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் 17 வயதான சிறுவன் போதையில் ஓட்டிச் சென்ற கார், மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்தார். இதனையடுத்து அவரை பொலிஸார் கைது செய்த நிலையில், தற்போது அந்த நபர் ஜாமினில் உள்ளார்.

மேலும், கடந்த மாதம், அரசியல்வாதி ஒருவரின் மகன் சென்ற கார் மோதியதில் 2 பேர் படுகாயமடைந்த நிலையில், அவரை பொலிஸார் கைது செய்தனர். இந்நிலையில், புனே நகர சாலைகளில் அடுத்தடுத்து இதுபோன்ற நிகழ்வுகள் நடப்பதால், அந்நகரம் பொது மக்கள் பயணிப்பதற்கு பாதுகாப்பு இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.S


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X