2025 ஜூலை 17, வியாழக்கிழமை

வாக்களிக்க முடியாமல் திரும்பிச் சென்ற முதல்வர்

Freelancer   / 2023 நவம்பர் 07 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

மிசோரம் மாநிலத்தில் 40 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு செவ்வாய்க்கிழமை (07) தொடங்கியது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்.

மிசோரம் முதல்வர் ஜோரம்தங்கா இன்று காலை ஐசால் வடக்கு-II தொகுதிக்குட்பட்ட 19-ஐசால் வெங்லாய்-I ஒய்.எம்.எம். ஹாலில்அமைக்கப்பட்டிருந்து வாக்குச்சாவடியில் வாக்களிக்க சென்றார்.

அப்போது, வாக்கு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. வாக்குச்சாவடி அதிகாரிகள் கோளாறை விரைவாக சரி செய்து விடுவோம். இதனால் சற்று காத்திருங்கள் என முதல்வரிடம் கூறினர். இதனால் முதல்வர் ஜோரம்தங்கா காத்திருந்தார்.

இருந்தபோதிலும் அதிகாரிகளால் உடனடியாக கோளாறை சரி செய்ய முடியவில்லை. இதனால் முதல்வர் ஜோரம்தங்கா வாக்குச்சாவடியில் இருந்து புறப்பட்டுச் சென்றார். பின்னர் வந்து வாக்களிக்க இருப்பதாக தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X