2026 மார்ச் 07, சனிக்கிழமை

வாக்குப் பெட்டி கொண்டு வரும்படி அடம்பிடித்த மூதாட்டி

A.K.M. Ramzy   / 2021 மார்ச் 30 , பி.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 திருவனந்தபுரம்

கேரளாவில் எதிர்வரும் 6ஆம் திகதி சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. கொரோனா பிரச்சினை காரணமாக வாக்குசாவடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு ள்ளதால்,  வாக்களிக்கும் நேரமும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர முதியவர்கள் வாக்குசாவடிக்கு செல்லாமல் முன்கூட்டியே தபால் வாக்குகள் அளிக்கவும் தேர்தல் கமி‌ஷன் ஏற்பாடு செய்துள்ளது. தபால் வாக்குபதிவு தற்போது ஆரமபிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் அதிகாரிகள் முதியவர்கள் வசிக்கும் வீடுகளுக்கு நேரில் சென்று அவற்றை சேகரித்து வருகிறார்கள். அவை கட்டை பைகளில் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

கொல்லம்பரம்பில் பகுதியை சேர்ந்த 92 வயது மூதாட்டி  தபால் வாக்கு அளிக்க விருப்பம் தெரிவித்து இருந்தார்.

தேர்தல் அதிகாரிகள் தபால் வாக்கு சீட்டை பெற்றுக்கொள்ள இவரின் வீட்டிற்கு சென்றனர். அவரிடம் கட்டை பையை நீட்டி அதில் தபால் வாக்கை போடும்படி அதிகாரிகள் கூறினர். பையை பார்த்ததும்  தபால் வாக்கை அதில் போட மறுத்து விட்டார்.

இந்த பையில் வாக்கு சீட்டை போட்டால் அது எப்படி பாதுகாப்பாக இருக்கும்? இந்த வாக்குசீட்டு எண்ணப்படுமா? என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. எனவே நீங்கள் மூடி முத்திரையிட்ட பெட்டி கொண்டு வாருங்கள். அதில் தான் வாக்கு சீட்டை போடுவேன் என்று அடம் பிடித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .