2025 ஜூலை 17, வியாழக்கிழமை

வாபஸ் பெற்ற இஸ்ரோ தலைவர்

Freelancer   / 2023 நவம்பர் 05 , பி.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இஸ்ரோ தலைவர் சோம்நாத் "நிலவொளியைக் குடித்த சிங்கங்கள்" என்ற பெயரில் தனது சுயசரிதை புத்தகத்தை வெளியிட உள்ளதாக அறிவித்திருந்தார். இந்நிலையில், சுயசரிதை புத்தகத்தில் முன்னாள் இஸ்ரோ இயக்குனர் கே.சிவன் குறித்து சில விமர்சனக் கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து, தனது சுயசரிதை புத்தகத்தை வெளியிடுவதில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.

மேலும், சோம்நாத் தனது சுயசரிதையில் தனது முன்னோடியான சிவனைப் பற்றி சில விமர்சனக் கருத்துகள் இருப்பதாகக் கூறப்பட்ட விவகாரம் தொடர்பாக செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்தார்.

அப்போது, “ஒரு நிறுவனத்தில் உயர் பதவியை அடைவதற்கான பயணத்தின் போது ஒவ்வொரு நபரும் சில வகையான சவால்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். இதுபோன்ற முக்கிய பதவிகளை வகிக்கும் நபர்கள் பல சவால்களை கடக்க வேண்டியிருக்கும். அவற்றில் ஒன்று ஒரு நிறுவனத்தில் பதவிகளை பெறுவது தொடர்பான சவால்கள். இவை அனைவரும் கடக்க வேண்டிய சவால்கள்.

அதிகமான நபர்கள் குறிப்பிடத்தக்க பதவிக்கு தகுதியுடையவர்களாக இருக்கலாம். நான் அந்த குறிப்பிட்ட விடயத்தை வெளியே கொண்டு வர முயற்சித்தேன். இது சம்பந்தமாக எந்த குறிப்பிட்ட நபரையும் நான் குறிவைக்கவில்லை” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X