2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

விஜயகாந்தை காட்டச் சொல்லி பிரேமலதாவுக்கு நெருக்கடி

Freelancer   / 2022 ஜூலை 07 , மு.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய முற்போக்கு திராவிட கழக (தே.மு.தி.க) தலைவர் விஜயகாந்த், உடல் நலக் குறைவால் அவதிப்பட்டு வருகிறார். நீரிழிவு நோய் காரணமாக, சமீபத்தில் அவரது கால் விரல்கள் அகற்றப்பட்டன. தற்போது, படுத்த படுக்கையாக வீட்டில் சிகிச்சையுடன் ஓய்வெடுத்து வருகிறார். இதற்காக, அவரது அறையிலேயே மருத்துவமனை வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.

அவரது உடல்நலம் குறித்து வெளியாகும் செய்திகள் வதந்தி என, தே.மு.தி.க தலைமை கூறி வருகிறது. இந்நிலையில், விஜயகாந்தை பார்த்தே ஆக வேண்டும் என நிர்வாகிகள், தொண்டர்கள் பலர், அவரது வீட்டுக்கு வருகின்றனர். தொலைபேசியிலும் தொடர்பு கொண்டு அனுமதி கேட்கின்றனர்.

மனைவி பிரேமலதா, அவரது இரண்டு மகன்கள், மைத்துனர் சுதீஷ் மற்றும் மாநில நிர்வாகிகளை அலைபேசி வாயிலாக தொடர்புகொள்ளும் தொண்டர்கள், விஜயகாந்தை சந்திக்க அனுமதி கேட்டு வருகின்றனர். இதனால், இவர்கள் தமது அலைபேசிகளை 'ஸ்விட்ச் ஓப்' செய்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .