Editorial / 2021 ஏப்ரல் 05 , பி.ப. 03:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய விமானப் படையைப் பலப்படுத்தும் வகையில் புதிதாக 10 ரஃபேல் போர் விமானங்களை தமது நாட்டுடன் இணைக்கும் முயற்சியில் இந்திய அரசு ஈடுபட்டுள்ளது.
அந்தவகையில் ஆரம்பத்தில் 11 போர் விமானங்கள் அம்பலா படைத்தளத்தில் ஈடுபடுத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது மேலும் 10 போர் விமானங்களை இணைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் இந்தியப் போர் விமானங்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
அத்துடன் இம் முயற்சியானது இரண்டாவது விமானப் படைப்பிரிவை உருவாக்க வழிவகுக்கும் எனவும் கூறப்படுகின்றது.
அந்தவகையில் அடுத்த 2 அல்லது 3 நாட்களில் 3 ரஃபேல் போர் விமானங்கள் பிரான்ஸ் அரசின் உதவியுடன் அந்நாட்டிலிந்து இந்தியாவுக்கு நேரடியாக கொண்டுவரப்படவுள்ளதோடு அதனைத் தொடர்ந்து 7-8 போர் விமானங்களை அடுத்த மாதத்தின் 2 ஆம் பாதிக்குள் பெற்றுக்கொள்ளப்படவிருப்தாகவும் இந்திய அரசு தெரிவித்துள்ளது.
மேலும் பிரான்சிலிருந்து கொண்டுவரப்படும் குறித்த போர் விமானங்கள் இந்தியாவிலுள்ள அம்பலா படைத் தளத்தில் நிறுத்தப்படும், என்றும் அவற்றில் சில பின்னர் ஹாஷிமாராவுக்கு அனுப்பப்படும்,அங்கு இரண்டாவது படைப்பிரிவைத் தொடங்குவதற்கான செயன் முறை ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

58 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
1 hours ago