2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

விவசாயத்தால் கோடிகளில் வருமானம் பெற்ற இளைஞன்

Freelancer   / 2023 செப்டெம்பர் 11 , பி.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த பிரமோத் கௌதம் என்ற நபர் பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் ஆட்டோமொபைல் பொறியாளராகப் பணியாற்றி வந்தார். ஆனால், அந்த வேலை அவருக்கு மன நிறைவை கொடுக்கவில்லை.  அதனால் குடும்பச் சொத்தாக தன் பெயரில் உள்ள 26 ஏக்கர் விவசாய நிலத்தில் விவசாயம் செய்தார்.

அந்த வகையில் முதலில் கடலை மற்றும் மஞ்சள் போன்றவற்றை பயிர் செய்தார். அதில் பெரிய அளவுக்கு லாபம் எதுவும் கிடைக்கவில்லை. அதனால் பாசிப்பயறு சாகுபடி செய்ய தொடங்கினார். கௌதம் உற்பத்தி செய்த பாசிப்பயறுக்கு நாக்பூரில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதைத் தொடர்ந்து, ‘வந்தனா ஃபுட்ஸ்’ என்ற பெயரில் பருப்பு மற்றும் தானியங்களை விற்பனை செய்வதற்கான ஆலையை தொடங்கினார். அவருடைய பிராண்ட் இப்போது ஃபிளிப்கார்ட் மற்றும் அமேசான் வாயிலாக நாடெங்கிலும் விற்பனைக்கு கிடைக்கிறது. பெரும் பொறியாளர்களைக் காட்டிலும் இந்த விவசாயினுடைய வருமானம் பன்மடங்கு கூடுதலாக இருக்கிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X