A.K.M. Ramzy / 2021 ஜனவரி 26 , பி.ப. 02:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதுடெல்லி
வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் நடந்துவரும் விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் விவசாயிகளுக்கும்,பொலிஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கண்ணீர் புகைகுண்டுகள் வீசப்பட்டன. தடியடியும் நடத்தப்பட்டதால் பதற்றமான சூழல் நீடிக்கிறது.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணி நடத்த விவசாயிகளுக்கு பொலிஸார் தரப்பில் இன்று அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், மத்திய டெல்லி பகுதிக்குள் வராமல் புறநகர் பாதையில் செல்ல வேண்டும் என விவசாயிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. பிற்பகல் 12 மணிக்கு மேல்தான் பேரணி தொடங்கவும் விவசாயிகளுக்கு பொலிஸார் அனுமதி அளித்திருந்தார்கள்.
இன்று காலை முதலே திக்ரி, காஜிப்பூர், சிங்கு எல்லையில் இருந்து ஆயிரக்கணக்கான டிராக்டர்களில் விவசாயிகள் பேரணியாக டெல்லி நோக்கி வரத் தொடங்கினர்.
திக்ரி எல்லையில் பொலிஸார் அமைத்திருந்த தடுப்புகளை மீறி விவசாயிகளில் ஒரு தரப்பினர் செல்ல முயன்றனர். அப்போது பொலிஸாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஆனால், அதையும் மீறி விவசாயிகள் டெல்லி நகருக்குள் சென்றனர்.
அதேபோல, முபாரக் சவுக் பகுதியில் விவசாயிகள் ஏராளமானோர் கூடினர். அங்கு பொலிஸார் அமைத்திருந்த தடுப்புகளை உடைத்து, பொலிஸார் வாகனங்களில் மீது ஏறிச் செல்ல முயன்றனர். இதைத் தடுக்கும் முயற்சியில் பொலிஸார் ஈடுபட்டபோது, விவசாயிகளுக்கும், பொலிஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கூட்டத்தினரைக் கலைக்க பொலிஸார் கண்ணீர் புகைகுண்டுகளை வீசிக் கலைத்தனர்.
ஆனால், மத்திய டெல்லி பகுதிக்குள் நுழைவோம் என விவசாயிகளில் ஒரு தரப்பினர் தொடர்ந்து பொலிஸாருடன் தகராறில் ஈடுபட்டு வருகின்றனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
54 minute ago
2 hours ago
3 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
2 hours ago
3 hours ago
9 hours ago