2026 மார்ச் 08, ஞாயிற்றுக்கிழமை

விவசாயிகளுக்காக தமிழகத்திலும் எதிரொலிக்கும்

A.K.M. Ramzy   / 2021 ஜனவரி 06 , பி.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 தர்மபுரி:

டெல்லியில் உரிமைக்கு போராடும் விவசாயிகளுக்காக ஆதரவாக இனி தமிழகத்தில் இருந்து எதிரொலிக்கும். விவசாயிகளின் போராட்டத்துக்கு மக்கள் நீதி மய்யம் தோள் கொடுக்கும்.

தர்மபுரி மாவட்டத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், ‘சீரமைப்போம் தமிழகத்தை’ என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். தர்மபுரி பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகில் கமல்ஹாசன் பேசியதாவது:-

நான் வசதியாக வாழ்ந்தால் மட்டும் போதாது. இந்த மக்களை வசதியாக வாழ செய்து கொடுத்து விட்டு போவேன்.  மாற்றத்தை தவிர வேறு எந்த கைமாற் றும் எதிர்பார்க்காமல் இங்கு மக்கள் திரண்டு உள்ளீர்கள். மக்களுக்கு நல திட்டங்களை தர்மம் போல் செய்து கொடுக்கக்கூடாது.

எம்.ஜி.ஆரை. நான் கையில் எடுக்கவில்லை. அவர் தான் என்னை கையிலெடுத்தார். அவர் மடியில் அமர்ந்து அவர் உணவு ஊட்ட நான் சாப்பிட்டு இருக்கிறேன். எனக்கு அவர் நீச்சல் கற்றுக் கொடுத்துள்ளார்.

எம்.ஜி.ஆர் வளர்த்த இரட்டை இலையில் இன்று 2 பேர் மட்டும் சாப்பிட்டு கொண்டிருக்கிறார்கள். தற்போது ஒன்றாக இருக்கும் கூட்டுகள் விரைவில் உடையும். இவர்கள் அடித்து கொள்வதில் நாற்காலியின் கைபிடிகள் உடையும். அதை நாம் பார்க்கத்தான் போகிறோம்.இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .