A.K.M. Ramzy / 2020 டிசெம்பர் 19 , மு.ப. 11:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
டில்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் சென்னையில் நேற்று வெள்ளிக்கிழமை ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்துக்கு, பொது முடக்கக் காலத்தைக் காரணம் காட்டி பொலிஸ் அனுமதி மறுத்துவிட்ட நிலையில், தடையை மீறி, வெள்ளிக் கிழமை உண்ணாவிரதம் நடைபெற்றது.
சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருந்த மேடையில், மு.க.ஸ்டாலின் பச்சை துண்டு அணிந்தவாறு வந்து காலை 8 மணிக்கு உண்ணாவிரதத்தைத் ஆரம்பித்தார். தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் கே.வி.தங்கபாலு, சு.திருநாவுக்கரசர்,
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர்கள் தி.வேல்முருகன் உள்பட பல்வேறு கட்சித் தலைவர்கள் சமூக இடைவெளி விட்டு போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றனர்.
டில்லி விவசாயிகள் போராட்டத்தின்போது இறந்த 21 விவசாயிகளுக்கு 2 நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
உண்ணாவிரதப் போராட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசுகையில், வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என்றார்.
புதுச்சேரியிலும் திமுக கூட்டணிக் கட்சிகள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தின. ஆனால், திமுகவும் காங்கிரஸ் கட்சியும் தனித்தனியாக உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினர்.
6 hours ago
07 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
07 Mar 2026