A.K.M. Ramzy / 2021 ஜனவரி 28 , பி.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதுடில்லி:
டில்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்தில் இரண்டு விவசாய சங்கங்கள் வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளன.
மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களு க்கு எதிராக டில்லி எல்லையில், 40க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் போராடி வருகின்றன. மத்திய அரசுடனான பலகட்ட பேச்சுவார்த்தைகளில் தீர்வு எட்டப்படாததால், குடியரசு தினம் டில்லியில் டிராக்டர் பேரணியை விவசாயிகள் நடத்தினர். இதில்,பொலிஸார் அனுமதிக்காத பகுதிகளிலும் சில விவசாயிகள் பேரணியை நடத்தினர். பொலிஸாரின் தடுப்புகளை தகர்த்து பேரணியை தொடர்ந்தனர். இந்த பேரணியில் திடீரென வன்முறை வெடித்தது. போராட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர்புகை குண்டுகளை வீசினர்.
இந்நிலையில், வேளாண் சட்டங்களுக்கு எதிரான தங்கள் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக ராஷ்டிரிய கிசான் மஜ்தூர் சங்கம் மற்றும் பாரதிய கிசான் யூனியன் ஆகிய விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.
இது தொடர்பாக ராஷ்டிரிய கிசான் மஜ்தூர் சங்கத்தின் தலைவரான வி.எம்.சிங், பாரதிய கிசான் யூனியன் சங்கத்தின் தலைவர் தாகூர் பானு பிரதாப் சிங் ஆகியோர் கருத்துத் தெரிவித்தனர்.
53 minute ago
2 hours ago
3 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
2 hours ago
3 hours ago
9 hours ago