Freelancer / 2025 மார்ச் 17 , பி.ப. 12:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
டாஸ்மாக் தலைமையகத்தை, திங்கட்கிழமை (17) முற்றுகையிடும் போராட்டத்தை தமிழக பாஜக அறிவித்திருந்த நிலையில், சென்னையில் உள்ள அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகளின் வீடுகளில் பொலிஸார் அதிக எண்ணிக்கையில் குவிக்கப்பட்டுள்ளனர்.
முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை வீட்டின் முன்பு பொலிஸார் முகாமிட்டுள்ளனர். அவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, பாஜக மாநிலச் செயலாளர் வினோஜ் பி.செல்வம் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தப் போராட்டத்துக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பாஜக உறுப்பினர்கள் சென்னை நோக்கி வந்த நிலையில், அவர்களை பொலிஸார் தடுத்து வைத்ததாக, எக்ஸ் தளத்தில் வினோஜ் பி.செல்வம் பதிவு வெளியிட்டிருந்தார்.
மேலும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் சிரேஸ்ட தலைவர்கள் வீடுகளின் முன்பும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்தப் போராட்டத்துக்கு பொலிஸ் தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டுள்ள காரணத்தால் முன்னெச்சரிக்கையாக பொலிஸார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
முன்னதாக, டாஸ்மாக் மூலம் ரூ.1000 கோடி முறைகேடு நடந்துள்ளதற்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்திருந்தது. இந்த முறைகேட்டை கண்டித்து திங்கட்கிழமை (17) ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தமிழக பாஜக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
9 minute ago
22 minute ago
33 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
22 minute ago
33 minute ago
2 hours ago