2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

வீட்டு செடியில் காய்த்த 2 கிலோகிராம் எலுமிச்சை

Editorial   / 2021 ஓகஸ்ட் 13 , மு.ப. 10:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

மைசூரு:

பொதுவாக எலுமிச்சை பழம் சிறிய உருண்டை வடிவில் தான் வளரும். ஆனால் கர்நாடகத்தில் ஆச்சரியப்படும் அளவுக்கு 2 கிலோகிராம் எடை அளவில் எலுமிச்சை பழம் காய்த்துள்ளது. 

பேக்கரி கடைக்காரர்

இந்த அரிய எலுமிச்சை பழம் மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா சரகூரு அருகே பீடரஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர், சனோஜ்  என்பவரின் வீட்டில் காய்த்துள்ளது.

இவர் அந்தப் பகுதியில் பேக்கரி கடை நடத்தி வருகிறார். இவர் தனது வீட்டின் கொல்லைப்புறத்தில் ஒரு எலுமிச்சை செடியை வளர்த்து வருகிறார்.

அதில் தான் ராட்சத எலுமிச்சை பழம் காய்த்துள்ளது. அந்த செடியில் 3 எலுமிச்சை பழங்கள் தான் காய்த்துள்ளன. ஆனால் ஒன்றின் எடை 2 கிலோ 150 கிராம் அளவில் இருந்துள்ளது. மற்ற 2 எலுமிச்சை பழங்களும் தலா 2 கிலோ கிராம் எடை கொண்டதாக உள்ளது.

பொதுமக்கள் வியப்பு

இதை பார்த்து சனோஜ் மற்றும் குடும்பத்தினர் ஆச்சரியம் அடைந்தனர். அத்துடன் இதுபற்றி தகவல் அறிந்ததும் அந்தப் பகுதி பொதுமக்கள் சனோஜ் வீட்டுக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர். 

பொதுவாக 2 கிலோ கிராமுவுக்கு எலுமிச்சை பழம் வாங்கினால் 40 பழங்கள் கிடைக்கும். ஆனால் ஒரே எலுமிச்சை பழம் 2 கிலோ கிராம் எடைக்கு இருப்பதை பார்த்து பொதுமக்கள், வியப்பில் ஆழ்ந்தனர். 

சிலர் அந்த எலுமிச்சை பழத்தை தங்களது செல்போனில் படம் பிடித்து சமூகவலைத்தளங்களில் பதிவிட்டனர். அது வைரலாகி வருகிறது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X