2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

’வீலிங்’ சாகசத்தில் 2 பெண்களும் குஷி

Freelancer   / 2023 ஏப்ரல் 02 , பி.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

மும்பை பாந்திரா குர்லாவில் இரண்டு இளம் பெண்களை மோட்டார் சைக்கிளில் முன்னுக்கும் பின்னுக்கும் அமர வைத்த  இளைஞன் மின்னல் ​வேகத்தில் பறந்து  சாகசம் செய்தார்.

மோட்டார் சைக்கிளின் முன்சக்கரத்தை மேலே தூக்கியவாறு 'வீலிங்' சாகசம் செய்து பரபரப்பை ஏற்படுத்தினார். வாலிபரின் விபரீத சாகசத்துக்கு 2 இளம்பெண்களும் ஈடுகொடுத்தனர்.  உயிரை காப்பாற்றிக்கொள்ள அவர்கள் இளைஞனை உடும்பு போல கட்டிப்பிடித்து தொற்றி கொண்டனர்.

இந்த வீடியோவுக்கு சமூக வலைத்தளத்தில் 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் வரை 'லைக்' தெரிவித்து உள்ளனர்.  விபரீத சாகசம் செய்த இளைஞன், அவருடன் திகில் பயணம் செய்த இளம்பெண்கள் மீது பொலிஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .