Freelancer / 2024 ஜூன் 03 , பி.ப. 01:59 - 0 - {{hitsCtrl.values.hits}}

வெடிகுண்டு மிரட்டலால்
அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்
புதுடெல்லியிலிருந்து மும்பை சென்ற ஆகாசா ஏர் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததைத் தொடர்ந்து, விமானம் ஆமதாபாத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டு, பயணிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
புதுடெல்லியில் இருந்து மும்பைக்கு ஆகாசா ஏர் விமானம், 186 பயணிகள், 1 கைக்குழந்தை மற்றும் 6 பணியாளர்களுடன் புறப்பட்டது. இந்நிலையில், விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் வந்தது. இதையடுத்து, பயணிகளின் பாதுகாப்பு கருதி, விமானம் அவசரமாக ஆமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
மேலும், விமானத்தில் இருந்த பயணிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர் என ஆகாசா ஏர் விமான நிறுவனம் தெரிவித்துள்ள நிலையில், சோதனைக்கு பிறகு, வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது.
இதுகுறித்து பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.S
21 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago