A.K.M. Ramzy / 2021 மார்ச் 03 , பி.ப. 03:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னை
தமிழக சட்டமன்ற தேர்தலில் வேளச்சேரி தொகுதியில் ராதிகா சரத்குமார் போட்டியிடுவார் என்று சமத்துவ மக்கள் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக கூட்டணியிலிருந்து விலகிய சமத்துவ மக்கள் கட்சி, சட்டமன்ற தோ்தலில் இந்திய ஜனநாயகக் கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடப் போவதாக அறிவித்து உள்ளது. இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமலையும் சரத்குமார் கடந்த வாரம் சந்தித்துப் பேசினார். கூட்டணி குறித்து இறுதி முடிவை கமல் அறிவிப்பார் என்றும் கூறியிருந்தார்.
இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையில் இன்று நடைபெற்ற சமத்துவ மக்கள் கட்சியின் ஆறாவது பொதுக் குழுக் கூட்டத்தில் பேசிய துணைப் பொதுச் செயலாளர் விவேகானந்தன், சென்னை வேளச்சேரி தொகுதியில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் ராதிகா சரத்குமார் போட்டியிடுவார் என்று அறிவித்தார்.
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago