2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

வைரலாகும் முதல் ஆளில்லா பிரியாணி

Ilango Bharathy   / 2023 மார்ச் 19 , மு.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

இந்தியாவின் முதல் ஆளில்லா பிரியாணி விற்பனையகத்தை ( Manless Takeaway). பி.வி.கே (BVK)  பிரியாணி   என்ற நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளாக மக்களின் பேராதரவுடன் இயங்கி வரும் குறித்த நிறுவனம் தற்போது சென்னை கொளத்தூரில், முதல் முறையாக ஆளில்லா பிரியாணி விற்பனையகத்தை நிறுவியுள்ளனர்.

அதுமட்டுமல்லாது சென்னையில் மேலும் 12 இடங்களிலும் இதை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளனர்.

இம்முறை மூலம் வாடிக்கையாளர்கள் குறித்த நிறுவனத்துக்கு சென்று, அங்குள்ள டிஜிட்டல் திரையில் உங்களுக்கு வேண்டிய உணவை தேர்ந்தெடுத்து ஓர்டர் செய்து , பணத்தை வங்கி கிரெடிட், டெபிட் கார்டுகள் மூலமாகச் செலுத்த முடியும்.

இதனையடுத்து உணவை ஓர்டர் செய்த மறுகணமே குறித்த உணவானது வாடிக்கையாளர்களின் கைகளில் பொதிசெய்யப்பட்டு வழங்கப்படுகின்றது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .