2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

ஹரியானாவில் வன்முறை : 5 பேர் உயிரிழப்பு

Freelancer   / 2023 ஓகஸ்ட் 02 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹரியானா மாநிலத்தில் நுஹ் மாவட்டத்தில் விஷ்வ இந்து பரிஷத் எனும் இந்து அமைப்பினர் பேரணி நடத்தினர். இந்த பேரணியில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இந்த பேரணி குருகிராம் – அல்வார் தேசிய நெடுஞ்சாலை வந்த போது திடீரென அங்கு ஒரு குழு வந்ததாகவும், அப்போதும் இரு தரப்பினரிடையே வன்முறை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இஸ்லாமியர்கள் படுகொலை உள்ளிட்ட வழக்குகளில் தேடப்பட்ட வந்த  முக்கிய குற்றவாளியான   பசு காவலர் மோனு மனேசரும் நிகழ்வில் கலந்துகொள்வார் என்று வதந்தி பரவிய நிலையில், இந்த வன்முறை வெடித்ததாக கூறப்படுகிறது.

இந்த வன்முறையில் ஹரியானாவில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை  தொடர்ந்து புதுடெல்லி அருகே உள்ள குருகுராமிலும் வன்முறை வெடித்தது. இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக இதுவரை 116 பேர் கைது செய்யப்பட்டனர். 40 வழக்குகளை பதிவு செய்த பொலிஸார், 100க்கும் மேற்பட்டவர்களை விசாரணைக்காக தடுத்து வைத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X