Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2022 நவம்பர் 23 , மு.ப. 09:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
”பத்து நாட்களுக்குள் இறந்து, மூன்றாம் நாள் மீண்டும் உயிர்த்தெழுவேன்” எனக் கூறிவரும் மதபோதகர் ஒருவர், தனக்கு சமாதியொன்றைக் கட்டுவதற்கான குழியையும் தோண்டி வைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள கொல்லபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் நாகபூஷணம்.
இவர் அக்கிராமத்தில் உள்ள தேவாலயமொன்றில் நீண்டகாலமாக மதபோதகராகக் கடமையாற்றி வருகின்றார்.
இந்நிலையில் அவர் அண்மைக்காலமாக ” நான் இன்னும் பத்து நாட்களுக்குள் இறந்துவிடுவேன் என்றும், மூன்றாம் நாள் மீண்டும் உயிர்த்தெழுந்துவிடுவேன் என்றும் தெரிவித்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் ”இதற்காகக் குழியொன்றை அவர் தாயார் செய்து வைத்துள்ளார் எனவும், அதன் அருகில் ‘தான் இறந்துவிட்டது போன்று பேனர் ஒன்றையும் வைத்திருப்பதாகவும்‘, அவரது நடவடிக்கைகள் அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளதாகவும் ” அவர்கள் தெரிவித்துள்ளனர்.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago