2025 ஜூலை 30, புதன்கிழமை

100 வீடுகள் கொண்ட கிராமத்தில் 100 சமாதிகள்

Freelancer   / 2022 ஜூன் 16 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆந்திர பிரதேசம், எமிகனூர் மண்டலத்திலுள்ள அய்யகொண்டா, ஒரு சிறிய கிராமமாகும். இங்கு ஒவ்வொரு வீட்டின் முன்பும் நான்குக்கும் மேற்பட்ட சமாதிகள் உள்ளன. 

மரணமடைந்த முன்னோர்களை அடுத்து வரும் வாரிசுகள் மறந்துவிடக்கூடாது என்பதற்காகவும்,  அவர்களுடைய ஆசீர்வாதம் இல்லாமல் எந்த ஒரு சிறிய வேலையையும் செய்ய கூடாது என்பதற்காகவும், எமிகனூர் கிராம மக்கள் காலகாலமாக, இந்த வினோத நடைமுறையை கடைபிடித்து வருகின்றனர்.

இந்தக் கிராமத்தில் வசிக்கும் பொதுமக்கள்,  தினமும் சமைத்த பின்னர் தங்கள் உணவுகளை வீட்டின் முன் இருக்கும் முன்னோர் சமாதிக்கு எடுத்துச்சென்று,  படைத்தபின்னரே சாப்பிடுகின்றனர்.

கிராமத்தில் இருக்கும் கோவிலுக்கு நைவேத்தியம் சமர்ப்பிக்கும் போது,  சமாதிகளுக்கும் நைவேத்திய சமர்ப்பணம் நடைபெறுகிறது.

குடும்பத்தில் யாருக்காவது திருமணம் நிச்சயக்கப்பட்டால், மணமக்களுக்கு உரிய புத்தாடைகளை முன்னோர்களின் சமாதியில் வைத்து,  பூஜைகள் நடத்துகின்றனர். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .