2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

11 பெண் தூய்மையாளர்களுக்கு 10 கோடி ரூபாய் பம்பர் பரிசு

Freelancer   / 2023 ஜூலை 30 , பி.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

கேரளாவில் 11 பெண் துப்புரவு பணியாளர்கள் கூட்டாக சேர்ந்து வாங்கிய லாட்டரிக்கு 10 கோடி ரூபாய் பம்பர் பரிசு விழுந்துள்ளது, அவர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. என்றாவது ஒருநாள் தங்களது நிலைமை மாறிவிடாதா என்று ஏக்கத்துடன் வாழ்ந்து வந்த இந்த துப்புரவு பணியாளர்களுக்கு லாட்டரி வழியாக அதிர்ஷ்டம், கதவை தட்டியுள்ளது.

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் பரப்பனகாடி நகராட்சியில் துப்புரவு ஊழியர்களாக பணிபுரிந்து வரும் 11 பேர், வழக்கம் போல தங்களது பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, அவ்வழியாக வந்த லாட்டரி விற்பனையாளர் ஒருவர், மழைக்கால பம்பர் லாட்டரி வேண்டுமா? எனக் கேட்டுள்ளார். அதற்கு 250 ரூபாய் கொடுத்து லாட்டரி வாங்க தங்களிடம் அவ்வளவு பணம் இல்லை எனக் கூறியுள்ளனர்.

தங்களிடம் இருக்கும் பணத்தை பகிர்ந்து கொடுத்து அனைவரும் கூட்டாக சேர்ந்து ஒரு டிக்கெட் வாங்கினால் என்ன? என்ற எண்ணம் உதிக்கவே, அனைரும் தங்களது கையில் இருந்த பணத்தை கொடுத்துள்ளனர். அதன்படி, 9 பேர் தலா 25 ரூபாயும், மீதமுள்ள பணத்தை இரண்டு பேரும் கொடுத்து ஒரு டிக்கெட்டை வாங்கியுள்ளனர்.

இந் நிலையில், மழைகால பம்பர் லாட்டரி சீட்டுக்கான குலுக்கல் முடிவுகள் கடந்த புதன்கிழமை வெளியானது. பாலக்காட்டில் விற்பனையான அந்த லாட்டரி சீட்டை வாங்கியவர்கள் யார் என்பது தெரியாமல் இருந்தது. பின்னர், அதனை பெண் துப்புரவு பணியாளர்கள் 11 பேர் சேர்ந்து வாங்கியது தெரியவந்தது.

பம்பர் பரிசான 10 கோடி ரூபாய் தங்களுக்கு விழுந்ததை அறிந்து அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். பரிசை வென்ற அவர்களுக்கு, நகராட்சி அதிகாரிகள் மற்றும் சக பணியாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X