2025 மே 07, புதன்கிழமை

15 ஆயிரம் அடி உயரத்தில் உலகின் முதல் மருத்துவமனை

Freelancer   / 2024 ஓகஸ்ட் 18 , பி.ப. 01:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய இராணுவமும், விமானப்படையும் இணைந்து பரசூட் மூலம் லடாக்கில் 15 ஆயிரம் அடி உயரத்தில் தற்காலிக மருத்துவமனையை ஏற்படுத்தியுள்ளன. இது ஒரு மைல்கல் சாதனை என மத்திய பாதுகாப்பு அமைச்சகம் பாராட்டியுள்ளது.

போர் அல்லது பேரிடர் காலங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தற்காலிக மருத்துவமனையை அமைக்கும் பணியில் இந்திய இராணுவம் ஈடுபட்டு வருகிறது. இராணுவம் நிலை கொண்டுள்ள சியாச்சின், லடாக் பகுதிகளில் இத்தகைய தற்காலிக மருத்துவமனைகளுக்கு தேவை அதிகம்.

ஏனெனில் அங்கு பணியில் இருக்கும் வீரர்களுக்கு அத்தியாவசிய மருத்துவ உதவிகள் உடனுக்குடன் கிடைப்பதில் சிரமங்கள் உள்ளன. இதை கருத்தில் கொண்டு, 'போர்ட்டபிள்' என்ற வகையில், ரெடிமேட் ஆக செய்யப்பட்ட மருத்துவமனைகளை அங்கு கொண்டு சென்று விமானத்தில் இறக்கியுள்ளது இராணுவம்.

சி130 ஹெர்குலிஸ் எனப்படும் இராணுவ போக்குவரத்து விமானத்தில் கொண்டு செல்லப்பட்ட இந்த போர்ட்டபிள் மருத்துவமனை, லடாக்கில் 15 ஆயிரம் அடி உயரத்தில் குறிப்பிட்ட இடத்தில் கச்சிதமாக பரசூட் மூலம் இறக்கப்பட்டது.

15ஆயிரம் அடி உயரத்தில் மருத்துவமனை உருவாக்கப்பட்டுள்ளது, உலகில் இதுவே முதல் முறை என்பதோடு, இராணுவத்தினர் மருத்துவமனையை அமைக்கும் வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

மேலும், இந்த மருத்துவமனையில், உயிர் காக்க தேவையான அனைத்து நவீன மருத்துவ சிகிச்சைகளையும் அளிக்க முடியும் என்கின்றனர் இராணுவ அதிகாரிகள்.S


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X