A.K.M. Ramzy / 2021 மார்ச் 09 , மு.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதுடில்லி;
சட்டப்பேரவைத் தேர்தலில் 187 தொகுதிகளில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடும் சூழல் உருவாகியுள்ளது. தேர்தலுக்குப் பிறகு கூட்டணி கட்சிகளின் நெருக்கடியை தவிர்க்கவே அதிக இடங்களில் திமுக போட்டியிடுவதாகக் கூறப்படுகிறது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3, மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதனைத் தொடர்ந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி , இந்திய கம்யூனிஸ்ட், மதிமுகவுக்கு தலா 6 தொகுதிகளும், காங்கிரஸுக்கு 25 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டன.
மார்க்சிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதோடு சேர்த்து, திமுக கூட்டணியில் இதுவரை 10 கட்சிகளுக்கு 57 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்ட 6 தொகுதிகள், ம.ம.க.வுக்கு ஒதுக்கப்பட்ட இரண்டில் ஒரு தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டு ள்ளது.
இதன் மூலம் கூட்டணி கட்சிகள் அவர்களுக்கான சின்னத்தில் 47 தொகுதிகளில் போட்டியிடுவார்கள். தற்போதைய நிலையில் 187 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் நிலை உள்ளது. மேலும் கூட்டணியில் சேரும் சிறிய கட்சிகளும் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடவார்கள் என்று திமுகவினர் தெரிவித்துள்ளனர்.
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago