2025 ஜூலை 19, சனிக்கிழமை

2 நாட்களுக்கு இணையம் முடக்கம்

Freelancer   / 2023 ஜூன் 12 , பி.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

மணிப்பூரில் கடந்த 24 மணிநேரமாக  வன்முறை சம்பவங்கள் ஏதும் இடம்பெறவில்லை எனினும், அமைதியை மீட்பதற்கான அனைத்து வகை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மணிப்பூரில் இருவேறு இனக்குழுவினர் இடையே மோதல் வெடித்துபெரும் வன்முறையாக வளர்ந்த சூழலில் இராணுவத்தின் உதவியோடு கலவரம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. கலவரத்தில் 100க்கும் மேற்பட்டோர் மரணமடைந்தனர்.

சுமார் 50 ஆயிரம் பேர் வீடுகளை விட்டு வெளியேறி 350 அரசு காப்பகங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

சமூக விரோதிகள் சமூக ஊடகங்கள் மூலமாக வதந்திகளையும் போலி வீடியோக்களையும் பரப்புவதைத் தடுக்க 15 ஆம் திகதி  வரை இணைய சேவைகள் யாவும் முடக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X