2025 ஜூலை 17, வியாழக்கிழமை

2-ம் திருமணம் செய்ய அரசு அனுமதி அவசியம்

Freelancer   / 2023 ஒக்டோபர் 29 , பி.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசு ஊழியர்கள் 2-வது திருமணம் செய்ய விரும்பினால், அரசிடம் அனுமதி பெற வேண்டும் என அசாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வாஸ் சர்மா தலைமையிலான அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அசாம் அரசு சார்பில் அதன் கூடுதல் தலைமைச் செயலாளர் நீரஜ் வர்மா, கடந்த 20-ல்உத்தரவு ஒன்றை வெளியிட்டார். அதில், ‘முதல் மனைவி அல்லது கணவர் உயிருடன் உள்ளபோது, இரண்டாவது திருமணம் செய்ய விரும்பும் அரசு ஊழியர்கள் அனைவரும் அதற்கான அனுமதியை அசாம் அரசிடம் முதலில் பெற்றுக்கொள்ள வேண்டும். இது ஆண், பெண் இருபாலருக்கும் பொதுவான சட்டம் ஆகும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அசாம் அரசின் இந்த சட்டத்தை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பாக, மீறும் நபர்களுக்கு பணியிலிருந்து கட்டாய ஓய்வளிப்பதுடன், அவர்கள் மீது சட்ட ரீதியிலான நடவடிக்கைகளும் எடுக்கப்படும், மேலும் அவருக்கான ஓய்வூதியம் நிறுத்தப்படுவதுடன், இந்த குற்றத்திற்காக அபராதங்களும் விதிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X