2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

21 நாள் சிசுவை விற்ற இளம் தாய்

Freelancer   / 2023 ஓகஸ்ட் 02 , பி.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொல்கத்தாவின் நோனா டங்கா பகுதியில் உள்ள ரயில்வே காலனியை சேர்ந்த ரூபாலி மோண்டல் எனும் இளம் பெண்ணுக்கு கடந்த 21 நாட்களுக்கு முன்பு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது.

இந்நிலையில் அந்த குழந்தையை ரூபாலி மோண்டல் இன்னொரு பெண்ணுக்கு விற்று விட்டதாக அப்பகுதியை சேர்ந்த ஒருவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். அதன்பேரில் அனந்தபுர் பொலிஸார் ரூபாலியை பிடித்து விசாரணை நடத்தியபோது, அவர் பிறந்து 21 நாட்களே ஆன குழந்தையை ரூ.4 இலட்சத்திற்கு விற்பனை செய்தது தெரியவந்துள்ளது.

 விசாரணையின் போது மிட்னாபூரை சேர்ந்த கல்யாணி குஹா பெண்ணுக்கு திருமணமாகி 15 வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லாத நிலையில் அவரிடம் பணம் வாங்கிக்கொண்டு குழந்தையை விற்றதாக ரூபாலி கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X