2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

273 வால்நட்களை தலையால் உடைத்து சாதனை

Freelancer   / 2023 ஓகஸ்ட் 08 , பி.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

கின்னஸ் சாதனை படைப்பதற்காக இளைஞர்கள் பலரும் பல்வேறு பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் பருப்பு வகைகளில் ஒன்றான வால்நட்களை தலையிலேயே உடைத்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார் இந்தியாவை சேர்ந்த வாலிபர் ஒருவர்.

வால்நட்டின் மேல் ஓட்டை உடைப்பது கடினமான நிலையில் ஒரு நிமிடத்தில் 273 வால்நட்களை தலையில் உடைத்து ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்த நவீன் குமார் இந்த சாதனையை படைத்துள்ளார்.

தற்காப்பு கலைஞரான இவர் கின்னஸ் சாதனை படைப்பதற்காக தலையிலேயே வால்நட்டை உடைக்கும் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். இவருக்கு முன்பு பாகிஸ்தானை சேர்ந்த முகமது ரஷித் என்பவர் 254 வால்நட்களை உடைத்தது தான் சாதனையாக இருந்தது. 2017-ம் ஆண்டு இந்த சாதனையை அவர் படைத்திருந்தார்.

இந்நிலையில் சுமார் 5 ஆண்டுகளுக்கு பிறகு முகமது ரஷித்தின் சாதனையை தற்போது நவீன்குமார் முறியடித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X